/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அருங்குணத்தில் மின்சாரம் பாய்ந்து குடிநீர் 'பம்ப் ஆப்பரேட்டர்' உயிரிழப்பு அருங்குணத்தில் மின்சாரம் பாய்ந்து குடிநீர் 'பம்ப் ஆப்பரேட்டர்' உயிரிழப்பு
அருங்குணத்தில் மின்சாரம் பாய்ந்து குடிநீர் 'பம்ப் ஆப்பரேட்டர்' உயிரிழப்பு
அருங்குணத்தில் மின்சாரம் பாய்ந்து குடிநீர் 'பம்ப் ஆப்பரேட்டர்' உயிரிழப்பு
அருங்குணத்தில் மின்சாரம் பாய்ந்து குடிநீர் 'பம்ப் ஆப்பரேட்டர்' உயிரிழப்பு
ADDED : செப் 22, 2025 10:31 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே அருங்குணத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் ஏணியிலிருந்து மின்சாரம் பாய்ந்து, குடிநீர் 'பம்ப் ஆப்பரேட்டர்' உயிரிழந்தார்.
மதுராந்தகம் அடுத்த அருங்குணம், மீனவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம், 56; குடிநீர் பம்ப் ஆப்பரேட்டர்.
இவர், நேற்று காலை 6:00 மணியளவில், கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் 'வால்வை' திறக்கச் சென்றார்.
அங்கு, குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் மின் ஒயர்கள் சேதமடைந்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் இரும்பு ஏணி மீது சாய்ந்து இருந்துள்ளன.
அப்போது, வால்வை திறந்த மாணிக்கம் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் மயங்கி கீழே விழுந்த அவரை அங்கிருந்தோர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக, மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவர்கள் பரிசோதித்த போது, மாணிக்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மதுராந்தகம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.