/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாலையை சீரமைக்க வலியுறுத்தி கருப்பு கொடியுடன் கிராமத்தினர் பேரணி சாலையை சீரமைக்க வலியுறுத்தி கருப்பு கொடியுடன் கிராமத்தினர் பேரணி
சாலையை சீரமைக்க வலியுறுத்தி கருப்பு கொடியுடன் கிராமத்தினர் பேரணி
சாலையை சீரமைக்க வலியுறுத்தி கருப்பு கொடியுடன் கிராமத்தினர் பேரணி
சாலையை சீரமைக்க வலியுறுத்தி கருப்பு கொடியுடன் கிராமத்தினர் பேரணி
ADDED : ஜூன் 04, 2025 12:56 AM

அச்சிறுபாக்கம்:அமணம்பாக்கம் கிராமத்தில், 17 ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாத நிலையில், உடனே சீரமைக்க வலியுறுத்தி, கருப்புக் கொடி ஏந்தி கிராமத்தினர் பேரணி சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அமணம்பாக்கம் ஊராட்சியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு, அச்சிறுபாக்கம் -- கொளத்துார் சாலையில் இருந்து பிரிந்து, அமணம்பாக்கம் கிராமத்திற்குச் செல்லும் தார்ச்சாலை உள்ளது.
இந்த சாலை, கடந்த 17 ஆண்டுகளுக்கு முன், தார்ச்சாலையாக அமைக்கப்பட்டது.
நாளடைவில் சாலை சேதமடைந்த நிலையில், 17 ஆண்டுகளைக் கடந்தும், இதுவரை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக உள்ளது. அத்துடன், மழைக்காலத்தில் சகதியாகி, வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.
அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் வருவதற்கும் சிரமமாக உள்ளது.
சாலையை சீரமைக்க கோரி, அப்பகுதிவாசிகள் ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், சாலையை சீரமைக்க வலியுறுத்தி அமணம்பாக்கம் கிராமத்தினர், கருப்புக் கொடி ஏந்தி பேரணி சென்றனர்.