/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 3 நாட்களாக குடிநீர் இல்லை வெங்கிடாபுரம் கிராமத்தில் அவதி 3 நாட்களாக குடிநீர் இல்லை வெங்கிடாபுரம் கிராமத்தில் அவதி
3 நாட்களாக குடிநீர் இல்லை வெங்கிடாபுரம் கிராமத்தில் அவதி
3 நாட்களாக குடிநீர் இல்லை வெங்கிடாபுரம் கிராமத்தில் அவதி
3 நாட்களாக குடிநீர் இல்லை வெங்கிடாபுரம் கிராமத்தில் அவதி
ADDED : மே 10, 2025 02:10 AM

மறைமலைநகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வெங்கிடாபுரம் ஊராட்சியில் வெங்கிடாபுரம், தெள்ளிமேடு, சாஸ்திரம்பாக்கம் உள்ளிட்ட மூன்று கிராமங்கள் உள்ளன.
இதில் சாஸ்திரம்பாக்கத்தில் 150 வீடுகளும், வெங்கிடாபுரத்தில், 800 வீடுகளும் உள்ளன. இந்த வீடுகளுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளைக் கிணறு மற்றும் திறந்தவெளி கிணறு அமைத்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வாயிலாக, குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக ஆத்துார் மின்வாரிய அலுவலகத்தின் வாயிலாக மும்முனை மின்சாரம் இணைப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக மின் மோட்டாருக்கு செல்லக்கூடிய மின் இணைப்பு பழுதடைந்து உள்ளதால், மின் மோட்டாரை இயக்க முடியவில்லை. இதனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி, குழாய்களில் விநியோகம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, இரு கிராம மக்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து வெங்கிடாபுரம் ஊராட்சி பிரதிநிதிகள் கூறியதாவது:
மின் இணைப்பில் பழுது காரணமாக, மின் மோட்டாரை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து மின் வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும், 'அலுவலகத்தில் ஊழியர்கள் இல்லை. எங்கு பழுது ஏற்பட்டு உள்ளது எனத் தெரியவில்லை' என, அலட்சியமாக பதில் கூறி வருகின்றனர்.
தற்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில், தனியார் டேங்கர் லாரிகளில் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.