/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் வேதாசலம் நகர்வாசிகள் தவிப்பு சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் வேதாசலம் நகர்வாசிகள் தவிப்பு
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் வேதாசலம் நகர்வாசிகள் தவிப்பு
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் வேதாசலம் நகர்வாசிகள் தவிப்பு
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் வேதாசலம் நகர்வாசிகள் தவிப்பு
ADDED : ஜூன் 13, 2025 02:08 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு வேதாசலம் நகரில், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு நகராட்சி வேதாசலம் நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தினமும், ஏராளமான மாணவர்கள் வந்து செல்கின்றனர். தனியார் மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகளுக்கு, அதிக அளவில் வாடிகையாளர்கள் வந்து செல்கின்றனர்.
ஆனால், அவர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துகின்றனர்.
இதுமட்டுமின்றி, ஆட்டோக்கள் ஆங்காங்கே முறையின்றி நிறுத்தப்படுகின்றன. சாலையை வாகனங்கள் ஆக்கிரமிப்பதால், பொதுமக்கள் எளிதில் செல்ல முடியாத சூழல் உள்ளது.
இதை பயன்படுத்தி மர்ம நபர்கள், பெண்களிடம் செயின் பறிப்பு, வங்கிகளுக்கு வருவோரை திசை திருப்பி பணம் பறிப்பு மற்றும் இளம்பெண்களிடம் பாலியல் ரீதியாக சீண்டல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்காமல், மெத்தனமாக உள்ளனர். சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற நகராட்சி நிர்வாகத்திடம், சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தனர்.
இதன் மீதும் நடவடிக்கை எடுக்காமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி, சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படும் பிரச்னைக்கு, அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.