/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சித்தாமூரில் சமுதாயக்கூடம் அமைக்க வலியுறுத்தல் சித்தாமூரில் சமுதாயக்கூடம் அமைக்க வலியுறுத்தல்
சித்தாமூரில் சமுதாயக்கூடம் அமைக்க வலியுறுத்தல்
சித்தாமூரில் சமுதாயக்கூடம் அமைக்க வலியுறுத்தல்
சித்தாமூரில் சமுதாயக்கூடம் அமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 11, 2025 01:49 AM
சித்தாமூர்:சித்தாமூர் சுற்றுவட்டாரத்தில் சரவம்பாக்கம், பழவூர்,க ன்னிமங்கலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
மதுராந்தகம், மேல்மருவத்துார், செய்யூர், சூணாம்பேடு போன்ற பகுதிகளுக்கு மையப்பகுதியாக சித்தாமூர் உள்ளது. இப்பகுதிக்கு அனைத்து பகுதியிலும் இருந்து போக்குவரத்து வசதி உள்ளது.
சித்தாமூர் பகுதியில் சமுதாயநலக் கூடம் இல்லாததால், மக்கள் தங்களது குடும்பங்களின் நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், பிறந்த நாள் விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை தனியார் மண்டபங்களில் நடத்தி வருகின்றனர்.
ஆகையால் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பகுதி மக்களின் நலன் கருதி சித்தாமூர் பகுதியில் சமுதாயநலக் கூடம் அமைத்து, அதன் மூலமாக ஊராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.