Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

ADDED : மே 26, 2025 12:49 AM


Google News
மதுராந்தகம்:படாளம் அடுத்த புளிப்பரக்கோவில் பாலாற்றில் நேற்று, அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.

படாளம் காவல் எல்லைக்கு உட்பட்ட புளிப்பரக்கோவில் பாலாற்று பகுதியில், அழுகிய நிலையில் ஆண் சடலத்தின் தலை மட்டும் வெளியே தெரிவதாக, அப்பகுதியில் ஆடு, -மாடு மேய்த்தவர்கள், படாளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின்படி அப்பகுதிக்குச் சென்ற படாளம் போலீசார், 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபரின் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின், வழக்கு பதிவு செய்து, இறந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us