/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/செங்கை வரதனார் தெருவில் சிறுபாலம் பணி துவக்கம்செங்கை வரதனார் தெருவில் சிறுபாலம் பணி துவக்கம்
செங்கை வரதனார் தெருவில் சிறுபாலம் பணி துவக்கம்
செங்கை வரதனார் தெருவில் சிறுபாலம் பணி துவக்கம்
செங்கை வரதனார் தெருவில் சிறுபாலம் பணி துவக்கம்
ADDED : பிப் 23, 2024 11:41 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு வேதாசலம் நகரில், தேவராஜனார் தெரு -- வரதனார் தெரு சந்திப்பில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிறுபாலம், சாலையின் மட்டத்தை விட தாழ்வாக உள்ளது.
இப்பகுதியில், மழைக்காலங்களில், கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் செல்வதால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், நகரவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதை தவிர்க்க, சிறுபாலம் கட்ட வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம் நகரவாசிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்பின், சிறுபாலம் கட்ட, பொது நிதியில், 5 லட்சம் ரூபாய் நிதியை, நகராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்தது.
அதன்பின், டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்களால் பணி துவங்கி, தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.