/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/சீரமைக்கப்படாத மின்கம்பி வெறுமனே நிற்கும் கம்பங்கள்சீரமைக்கப்படாத மின்கம்பி வெறுமனே நிற்கும் கம்பங்கள்
சீரமைக்கப்படாத மின்கம்பி வெறுமனே நிற்கும் கம்பங்கள்
சீரமைக்கப்படாத மின்கம்பி வெறுமனே நிற்கும் கம்பங்கள்
சீரமைக்கப்படாத மின்கம்பி வெறுமனே நிற்கும் கம்பங்கள்
ADDED : பிப் 23, 2024 11:08 PM

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட ஆறாவது வார்டில், பனையூர் பெரியகுப்பம், பனையூர் சின்னகுப்பம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு, 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
பனையூர் பெரியகுப்பம் கடற்கரைப் பகுதியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பருவமழையின் போது, ஆறு மின்கம்பங்களில் இருந்த மின்கம்பிகள் சேதமடைந்தன.
அதன்பின், கடந்த இரண்டு ஆண்டுகளாக, மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்கம்பிகளை சீரமைக்காததால், பேரூராட்சி சார்பாக தெருவிளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதியில் இரவு நேரத்தில் கடந்து செல்லவே அப்பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய மின்கம்பிகள் அமைத்து தெருவிளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.