/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கை அருகே தெருவில் கத்தியுடன் சுற்றிய இருவர் கைது செங்கை அருகே தெருவில் கத்தியுடன் சுற்றிய இருவர் கைது
செங்கை அருகே தெருவில் கத்தியுடன் சுற்றிய இருவர் கைது
செங்கை அருகே தெருவில் கத்தியுடன் சுற்றிய இருவர் கைது
செங்கை அருகே தெருவில் கத்தியுடன் சுற்றிய இருவர் கைது
ADDED : ஜூன் 22, 2025 08:42 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு தாலுகா போலீசார் நேற்று முன்தினம் இரவு வல்லம், திருப்போரூர் கூட்டுச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அங்குள்ள மனாலிநத்தம் மேட்டுத் தெருவில் ரோந்து சென்ற போது, பட்டாக்கத்தியுடன் வலம் வந்த மூன்று பேர், கத்தியை தெருக்களில் தேய்த்தபடி சென்றனர்.
அப்போது, போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அதில் இருவரை மடக்கிப் பிடித்து கைது செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில் இருவரும், அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், 24, அவரது நண்பர் லோகேஷ், 25, என தெரிந்தது.
இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தப்பிச் சென்ற மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.