/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இன்ஸ்டாவில் வெடிகுண்டு வீடியோ பதிவிட்ட இருவருக்கு 'காப்பு' இன்ஸ்டாவில் வெடிகுண்டு வீடியோ பதிவிட்ட இருவருக்கு 'காப்பு'
இன்ஸ்டாவில் வெடிகுண்டு வீடியோ பதிவிட்ட இருவருக்கு 'காப்பு'
இன்ஸ்டாவில் வெடிகுண்டு வீடியோ பதிவிட்ட இருவருக்கு 'காப்பு'
இன்ஸ்டாவில் வெடிகுண்டு வீடியோ பதிவிட்ட இருவருக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 19, 2025 08:27 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் தீபக், 21. இவர், பழைய குற்றவாளி கோபி என்பவரின் தம்பி.
தன் பிறந்தநாளான, கடந்த 5ம் தேதி தீபக், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நண்பரான தேவ், 22, என்பவருடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து, புகை பிடித்துக் கொண்டே கம்பீரமாக நடந்து வருவது போன்று வீடியோ எடுத்து, அதை 'எடிட்' செய்து, பின்னணி இசையுடன் பதிவிட்டு உள்ளார்.
பொது மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த வீடியோவை கண்ட செங்கல்பட்டு நகர காவல் நிலைய போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து விசாரித்து, நேற்று மாலை தேவ் மற்றும் தீபக் இருவரையும் கைது செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.