/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/லாரியில் மோதி விபத்து சுமை வாகன ஓட்டுனர் பலிலாரியில் மோதி விபத்து சுமை வாகன ஓட்டுனர் பலி
லாரியில் மோதி விபத்து சுமை வாகன ஓட்டுனர் பலி
லாரியில் மோதி விபத்து சுமை வாகன ஓட்டுனர் பலி
லாரியில் மோதி விபத்து சுமை வாகன ஓட்டுனர் பலி
ADDED : பிப் 24, 2024 12:02 AM
சதுரங்கப்பட்டினம்:மயிலாடுதுறை அடுத்த நெடுமருதுாரைச் சேர்ந்தவர் அய்யப்பன், 29; வாகன ஓட்டுனர். சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்கு நேற்று காலை, 'அசோக் லேலண்ட் தோஸ்த்' சுமை வாகனத்தை ஓட்டிச் சென்றார்.
காலை 8:30 மணிக்கு, கல்பாக்கம் அடுத்த வாயலுார் பாலாற்றுப் பாலம் அருகில் சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த டாரஸ் லாரியில் மோதியது.
அந்த விபத்தில் காயமடைந்த அய்யப்பனை, சதுரங்கப்பட்டினம் போலீசார் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அய்யப்பனை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். அவரது அண்ணன் பூபாலன், சதுரங்கப்பட்டினம் போலீசில் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.