/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ லாரிகள் மோதல் போக்குவரத்து பாதிப்பு லாரிகள் மோதல் போக்குவரத்து பாதிப்பு
லாரிகள் மோதல் போக்குவரத்து பாதிப்பு
லாரிகள் மோதல் போக்குவரத்து பாதிப்பு
லாரிகள் மோதல் போக்குவரத்து பாதிப்பு
ADDED : செப் 09, 2025 10:30 PM
திருப்போரூர்:தையூர்- காயார் சாலையில் லாரிகள் மோதி கொண்டதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்போரூர் அடுத்த தையூர் ஏரியில் மண் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று நேற்று காலை 8:00 மணிக்கு காயார் சலையில் சென்றது. எதிர் திசையில் மண் ஏற்றுவதற்காக மற்றொரு லாரி தையூர் ஏரி நோக்கி வந்தது.
அச்சாலை குறுகிய நிலையில், இருந்ததால் எதிர்பாராதவிதமாக இரண்டு லாரிகளும் மோதிக்கொண்டன. இதில், ஒரு லாரியின் வலது முன்பக்கத்திலும், மற்றொரு லாரியின் பக்கவாட்டிலும் சேதம் ஏற்பட்டது. ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், அச்சாலையில் சென்ற பள்ளி மாணவர்கள், வேலைக்கும் செல்லும் தொழிலாளர்கள் அவதிப்பட்டனர்.