/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நுண்ணீர் பாசன கருவிகள் பராமரிப்பு குறித்து பயிற்சி நுண்ணீர் பாசன கருவிகள் பராமரிப்பு குறித்து பயிற்சி
நுண்ணீர் பாசன கருவிகள் பராமரிப்பு குறித்து பயிற்சி
நுண்ணீர் பாசன கருவிகள் பராமரிப்பு குறித்து பயிற்சி
நுண்ணீர் பாசன கருவிகள் பராமரிப்பு குறித்து பயிற்சி
ADDED : மே 22, 2025 01:37 AM

திருப்போரூர்:திருப்போரூர் வட்டம், வெண்பேடு கிராமத்தில், வேளாண்மை பொறியியல் துறை சார்பில், நுண்ணீர் பாசன கருவிகள் பராமரிப்பு குறித்த பயிற்சி மற்றும் செயல் விளக்க கூட்டம், நேற்று நடந்தது.
நந்தனம் உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ் முத்துராஜ் தலைமை வகித்தார். வேளாண் உதவி பொறியாளர் விஜயலட்சுமி, உதவி வேளாண்மை அலுவலர் கிருபா சங்கரி, உதவி தோட்டக்கலை அலுவலர் ரபூனி விஜயசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வெண்பேடு, இள்ளலுார், காயார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் விவசாயிகளுக்கு, நுண்ணீர் பாசன கருவிகள் பராமரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், விவசாயிகளை விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்று, நுண்ணீர் பாசன கருவிகள் பராமரிப்பு குறித்து, நேரடியாக செயல் விளக்கமாக செய்து காண்பித்தனர்.