ADDED : பிப் 24, 2024 01:31 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, அந்த பகுதிக்கு விரைவாக சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீசார், திம்மாவரம் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த திம்மாவரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், 21, செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த யுவன் சங்கர், 20, ஆகாஷ், 23, உள்ளிட்டோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 1.300 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை, போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின், மூவரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.