/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/'ஜிம்' பயிற்சியாளரை வெட்டிய மூவர் கைது'ஜிம்' பயிற்சியாளரை வெட்டிய மூவர் கைது
'ஜிம்' பயிற்சியாளரை வெட்டிய மூவர் கைது
'ஜிம்' பயிற்சியாளரை வெட்டிய மூவர் கைது
'ஜிம்' பயிற்சியாளரை வெட்டிய மூவர் கைது
ADDED : ஜன 30, 2024 09:00 PM
மறைமலை நகர்:மறைமலை நகர் என்.ஹெச்., -1 சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன், 25. அதே பகுதியில் உள்ள ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 28ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த போது, உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் மூவர், கிருஷ்ணனை சரமாரியாக தாக்கி, தலையில் கத்தியால் வெட்டிவிட்டு கிருஷ்ணனின் மொபைல் போனை திருடிச் சென்றனர். அக்கம்பக்கத்தினர் கிருஷ்ணனை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.
வழக்கு பதிவு செய்து விசாரித்த மறைமலை நகர் போலீசார், வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார், 26, ஆகாஷ், 20, மற்றும் திருக்கச்சூர் பகுதியை சேர்ந்த பரத், 20, ஆகியோரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.