/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/புடவை கடத்திய வாலிபர் ஸ்கூட்டருடன் சிக்கினார்புடவை கடத்திய வாலிபர் ஸ்கூட்டருடன் சிக்கினார்
புடவை கடத்திய வாலிபர் ஸ்கூட்டருடன் சிக்கினார்
புடவை கடத்திய வாலிபர் ஸ்கூட்டருடன் சிக்கினார்
புடவை கடத்திய வாலிபர் ஸ்கூட்டருடன் சிக்கினார்
ADDED : ஜன 30, 2024 11:31 PM

சென்னை:தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை பகுதிகளில், ஜவுளி கடைகள் அதிகம் உள்ளன. இப்பகுதிகளில், வாடிக்கையாளர்கள் போல மர்ம கும்பல்கள், புடவை திருட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இது குறித்து தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், தி.நகர் தண்டபாணி தெருவைச் சேர்ந்த ராஜேஷ் ஜெயின், 38, என்பவரது கடையில் இருந்து, புடவைகள் திருடு போயுள்ளன, போலீசாருக்கு தெரிய வந்தது.
ராஜேஷ் ஜெயின், அதே பகுதியில் ஜவுளி மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சில தினங்களுக்கு முன், இரவு நேரத்தில்கடையில் இருந்த புடவை பண்டல்களை, கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் ஏற்றினார்.
பின், கடைக்குள் சென்றார். அந்நேரத்தில் ஸ்கூட்டருடன் 20,000 ரூபாய் மதிப்பிலான, 40 புடவைகளையும் மர்ம நபர்கள் கடத்தினர்.
இது குறித்து மாம்பலம் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். இதில், பள்ளிக்கரணை கர்மேல் தெருவைச் சேர்ந்த லோகேஷ், 23, என்பவர் சிக்கினார். அவரை கைது செய்து, புடவைகள் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.
கூட்டாளிகளை தேடி வருகினறனர்.