/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/சித்ரவதை செய்த கணவரை சுவரில் மோதி கொன்ற பெண்சித்ரவதை செய்த கணவரை சுவரில் மோதி கொன்ற பெண்
சித்ரவதை செய்த கணவரை சுவரில் மோதி கொன்ற பெண்
சித்ரவதை செய்த கணவரை சுவரில் மோதி கொன்ற பெண்
சித்ரவதை செய்த கணவரை சுவரில் மோதி கொன்ற பெண்
ADDED : ஜன 05, 2024 11:15 PM
நுங்கம்பாக்கம்:மதுபோதையில் தினமும் கொடுமைப்படுத்தியதால் ஆத்திரமடைந்து, சுவரில் தலையை மோதி கணவரைக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை நுங்கம்பாக்கம், வைகுண்டபுரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்,44; சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் காவலாளியாக பணிபுரிந்தார். இவரது மனைவி கனகவள்ளி, 34, வீட்டு வேலை செய்து வருகிறார். தம்பதிக்கு திவாகர், 15, ராகவ், 13, என, இரு மகன்கள் உள்ளனர். மது அருந்தும் பழக்கமுள்ள பாலகிருஷ்ணன், தினமும் போதையில் வந்து, மனைவி கனகவள்ளியிடம் தகராறில் ஈடுபட்டு, சித்ரவதை செய்துள்ளார்.
அதேபோல, நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வந்த பாலகிருஷ்ணன், கனகவள்ளியை அடித்துள்ளார்.
இதை தாங்கிக் கொள்ள முடியாத கனகவள்ளி, ஆத்திரத்தில் பாலகிருஷ்ணனின் தலையைப் பிடித்து, சுவரில் பலமாக மோதியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன், அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்து கிடந்த பாலகிருஷ்ணன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கனகவள்ளி கைது செய்து விசாரித்தனர்.
கொலை செய்யும் நோக்கில் இதை செய்யவில்லை. வலி தாங்க முடியாமல் ஆத்திரத்தில் சுவரில் தள்ளியதால் கணவர் உயிரிழந்ததாக, போலீசாரிடம் கனகவள்ளி வாக்குமூலம் அளித்து உள்ளார்.