ADDED : ஜன 12, 2024 11:24 PM
சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த நரசங்குப்பத்தைச் சேர்ந்தவர் நரேந்திரபாபு, 49. நேற்று காலை 8:45 மணிக்கு, வீட்டின் வெளியே, பல் துலக்கி கொண்டிருந்த போது, தரையிலிருந்த கல்லில் கால் இடறி, வீட்டின் சுவரில் தலை மோதி காயமடைந்தார்.
அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர் பரிசோதனையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து, சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில், அவரது தந்தை அளித்த புகாரின்படி போலீசார் விசாரித்து வருகின்றனர்.