/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அழகுமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை அழகுமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
அழகுமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
அழகுமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
அழகுமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஜூன் 08, 2025 08:57 PM
மதுராந்தகம்:படாளம் அடுத்த புக்கத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட நடராஜபுரம் திருநங்கையர் குடியிருப்பில், அழகுமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிந்து நேற்று முன்தினம், கும்பாபிஷேக பணிகளுக்காக பந்தக்கால் நடப்பட்டது.
முதல் கால பூஜையுடன் மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நவகிரக பூஜை, தனபூஜையுடன் விழா தொடங்கியது.
பின், இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜைகள் முறையே நடந்தன.
நேற்று, நான்காம் கால யாக சாலை பூஜையில் வேத மந்திரங்கள் முழங்க, யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டுவரப்பட்டது.
ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவர் அன்பழகன் தலைமையில், காலை 9:00 முதல்- 10:30 மணிக்குள், மேள தாளங்கள் முழங்க, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, நுாதன ஆலய கோபுர மண்டப அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
பின், கோபுர கலசத்திற்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கையர், மக்கள் பிரதிநிதிகள், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.
அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.