/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/கடல்நீரில் குடிநீர் உற்பத்தி ஆலை இன்று முதல்வர் துவக்குகிறார்கடல்நீரில் குடிநீர் உற்பத்தி ஆலை இன்று முதல்வர் துவக்குகிறார்
கடல்நீரில் குடிநீர் உற்பத்தி ஆலை இன்று முதல்வர் துவக்குகிறார்
கடல்நீரில் குடிநீர் உற்பத்தி ஆலை இன்று முதல்வர் துவக்குகிறார்
கடல்நீரில் குடிநீர் உற்பத்தி ஆலை இன்று முதல்வர் துவக்குகிறார்
ADDED : பிப் 23, 2024 11:19 PM

மாமல்லபுரம்:சென்னை குடிநீர் வாரியத்தின்கீழ், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சி, சூலேரிக்காடு பகுதியில், முதலாம் பிரிவு கடல்நீரில் குடிநீர் உற்பத்தி ஆலை, கடந்த 2013 முதல் இயங்குகிறது.
அதே பிரிவில், தினசரி 15 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்வதற்கான மற்றொரு ஆலை, 1,516.22 கோடி ரூபாய் மதிப்பில், தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையை, முதல்வர் ஸ்டாலின், இன்று காலை 11:00 மணிக்கு துவக்கி வைக்கிறார். நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளின் திட்டங்களையும் துவக்கி வைக்கிறார்.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதையடுத்து, ஆலை மற்றும் விழா நிகழ்விட பகுதியில், போலீஸ் எஸ்.பி., சாய் பிரணீத் தலைமையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.