/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சிறுமியை கடத்தி சென்று அத்துமீறல் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை சிறுமியை கடத்தி சென்று அத்துமீறல் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
சிறுமியை கடத்தி சென்று அத்துமீறல் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
சிறுமியை கடத்தி சென்று அத்துமீறல் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
சிறுமியை கடத்தி சென்று அத்துமீறல் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
ADDED : மார் 22, 2025 11:27 PM
சென்னை, அண்ணாநகர் பகுதிக்கு உட்பட்ட பூங்காவுக்கு, அப்பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி வருவது வழக்கம். பூங்காவுக்கு வந்த சிறுமியிடம் கோவிந்தா சார்கி, 26, என்ற காவலாளி பழகியுள்ளார்.
நாளடைவில் சிறுமியிடம் ஆசை வார்தைக் கூறி, அவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் உறவினர் அளித்த புகாரின்படி, அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார், இந்திய தண்டனை சட்டம், 'போக்சோ' சட்டப் பிரிவுகளின் கீழ், கோவிந்தா சார்கி மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை 'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்தது. போலீசார் சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, கோவிந்தா சார்கி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன எனக் கூறி, அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.