ADDED : செப் 05, 2025 09:23 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே, சாலை ஓரம் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார்.
கன்னியாகுமரி மாவட்டம், பைங்குளத்தை சேர்ந்தவர் டெல்வின் ரெக்ஸ், 33. அவரது நண்பர்கள், சென்னை, அம்பத்துாரை சேர்ந்த லோகேந்திரன், 34, கெருகம்பாக்கத்தை சேர்ந்த பழனி, 55. மூவரும், நேற்று முன்தினம் இரவு மாருதி பிரெஸ்ஸா காரில், கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.
மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டையில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் நின்றிருந்த டிப்பர் லாரி மீது, எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில், காரை ஓட்டி வந்த டெல்வின் ரெக்ஸ், சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற இருவரும் காயமடைந்தனர்.
காயம் அடைந்த லோகேந்திரன், பழனி ஆகியோரை மதுராந்தகம் போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.