/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கூடுவாஞ்சேரி மரக்கடையில் திடீர் தீ விபத்து கூடுவாஞ்சேரி மரக்கடையில் திடீர் தீ விபத்து
கூடுவாஞ்சேரி மரக்கடையில் திடீர் தீ விபத்து
கூடுவாஞ்சேரி மரக்கடையில் திடீர் தீ விபத்து
கூடுவாஞ்சேரி மரக்கடையில் திடீர் தீ விபத்து
ADDED : செப் 21, 2025 01:36 AM

மறைமலை நகர்:கூடுவாஞ்சேரி அருகே மரக்கடையில் தீப்பற்றி பொருட்கள் எரிந்து நாசமாயின.
கூடுவாஞ்சேரி அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் மரக்கடை நடத்தி வருகிறார்.
இதில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கடையை மூடி விட்டுச் சென்றார். இந்நிலையில் அதிகாலை மரக்கடை தீப்பற்றி எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் மறைமலை நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மறைமலை நகர், மகேந்திரா சிட்டி, செங்கல்பட்டு, சிறுசேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் வந்தனர். ஆறு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள் எரிந்தன. இச்சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.