/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/மதுராந்தகம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லைமதுராந்தகம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லை
மதுராந்தகம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லை
மதுராந்தகம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லை
மதுராந்தகம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லை
ADDED : ஜன 13, 2024 12:55 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சியில், தெரு நாய்கள் அதிகரித்து விட்டன. இதைக் கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்காததால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த நாய்கள், கூட்டம் கூட்டமாக சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலையின் மையத்தில் உலவுவதால், டூ -- வீலரில் செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர்.
சாலையில் நடந்து செல்வோரை கடிப்பது, குழந்தைகளை துரத்துவது, இறைச்சிக் கடை உள்ள பகுதியில், உணவை தேடி அங்கும், இங்கும் ஓடுவது என, தொடர்ந்து நாய்கள், பகுதிவாசிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, கூட்டமாக சேரும் நாய்கள், திடீரென்று சாலையின் குறுக்கே ஓடுவதால், பலரும் அலறியடித்து ஓடுகின்றனர். பலரும், 'கடி' வாங்கிய சம்பவங்களும் நடந்துள்ளது.
மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில், நாய்கள் அதிக அளவில் உலா வருவதால், நோயாளிகளை நலம் விசாரிக்க வரும் உறவினர்கள் பயத்துடன் செல்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் சாலையில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.