/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/விரைவு ரயில் மீது கல் வீச்சு திருவொற்றியூரில் அத்துமீறல்விரைவு ரயில் மீது கல் வீச்சு திருவொற்றியூரில் அத்துமீறல்
விரைவு ரயில் மீது கல் வீச்சு திருவொற்றியூரில் அத்துமீறல்
விரைவு ரயில் மீது கல் வீச்சு திருவொற்றியூரில் அத்துமீறல்
விரைவு ரயில் மீது கல் வீச்சு திருவொற்றியூரில் அத்துமீறல்
ADDED : ஜன 06, 2024 11:51 PM

சென்னை:சென்னை, சென்ட்ரல் - பீஹார் மாநிலம் சாப்ராவிற்கு, கங்கா - காவேரி பயணியர் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று அதிகாலை எண்ணுார் ரயில்வே யார்டில் இருந்து, சென்ட்ரலுக்கு காலி பெட்டிகளுடன், அந்த ரயில் சென்றுக் கொண்டிருந்தது.
அதிகாலை 2:15 மணிக்கு, திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது, மர்ம நபர்கள் ரயில் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கியுள்ளனர்.
இதில், ரயில் பெட்டியின் சமையலறை பெட்டி, பயணியர் குளிர்சாதன பெட்டி என, 12 பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. பயணியர் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
இது குறித்து, தண்டையார்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரிக்கின்றனர்.