ADDED : செப் 18, 2025 01:53 AM

ஊனமாஞ்சேரி:ஊனமாஞ்சேரியில் நேற்று நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊனமாஞ்சேரி முதல் நிலை ஊராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம், நேற்று நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், மீனாட்சி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி, முகாமை துவக்கி வைத்தனர். ஊராட்சி தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
முகாமில், மக்கள் நல்வாழ்வு திட்டத்தின் மூலமாக கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக முதியவர்களுக்கு மருந்து பெட்டகங்களும் வழங்கப்பட்டன.
தவிர, 15க்கும் மேற்பட்ட அரசு துறைகள் மூலமாக, மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில், பொதுமக்கள் 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.