/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கீரப்பாக்கத்தில் குடியேறியோருக்கு முகவரி மாற்ற சிறப்பு முகாம் கீரப்பாக்கத்தில் குடியேறியோருக்கு முகவரி மாற்ற சிறப்பு முகாம்
கீரப்பாக்கத்தில் குடியேறியோருக்கு முகவரி மாற்ற சிறப்பு முகாம்
கீரப்பாக்கத்தில் குடியேறியோருக்கு முகவரி மாற்ற சிறப்பு முகாம்
கீரப்பாக்கத்தில் குடியேறியோருக்கு முகவரி மாற்ற சிறப்பு முகாம்
ADDED : மே 29, 2025 12:12 AM

கூடுவாஞ்சேரி, அனகாபுத்தூரில் இருந்து கீரப்பாக்கம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டோருக்கு, முகவரி மாற்றும் முகாம் நேற்று நடந்தது.
பல்லாவரம் அடுத்த அனகாபுத்துார், கூவம் ஆற்றங்கரையோரம், பல ஆண்டுகளாக குடியிருந்த நபர்களின், 400-க்கும் மேற்பட்ட வீடுகள், கடந்த சில நாட்களாக அகற்றப்பட்டன.
இந்நிலையில், வீடுகளை இழந்தோரில் தகுதியான நபர்களுக்கு, கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரிய குடியிருப்பில், வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன
அதன்படி, நேற்று வரை 404 குடும்பத்தினருக்கு வீடுகள் வழங்கப்பட்ட நிலையில், குடியேறிய நபர்களின் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை புதிய முகவரிக்கு மாற்ற, நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் குமரேசன், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா உள்ளிட்டோர் முகாமை ஆய்வு செய்தனர்.
அப்போது, கீரப்பாக்கம் குடியிருப்புக்கு பேருந்து, இணையம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை தேவைக்கு ஏற்ப செயல்படுத்த, அங்கு குடியேறிய பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.