/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மதுராந்தகத்தில் மழைநீர் வடிகால் நீண்டகால பிரச்னைக்கு தீர்வு மதுராந்தகத்தில் மழைநீர் வடிகால் நீண்டகால பிரச்னைக்கு தீர்வு
மதுராந்தகத்தில் மழைநீர் வடிகால் நீண்டகால பிரச்னைக்கு தீர்வு
மதுராந்தகத்தில் மழைநீர் வடிகால் நீண்டகால பிரச்னைக்கு தீர்வு
மதுராந்தகத்தில் மழைநீர் வடிகால் நீண்டகால பிரச்னைக்கு தீர்வு
ADDED : மே 30, 2025 11:15 PM

மதுராந்தகம்:மதுராந்தகம் பகுதியில் சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, டவுன் பகுதிக்குச் செல்லும் புறவழிச் சாலை உள்ளது.
அந்த சாலையில் மழைநீர் வடிகால்வாய் இல்லாமல், பருவ மழை காலங்களில் மழைநீர் விரைந்து வெளியேற முடியாமல் சிரமம் ஏற்பட்டது.
அதன் காரணமாக, மத்திய அரசு சாலை மேம்பாட்டு உட்கட்டமைப்பு திட்டத்தின் வாயிலாக, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, மதுராந்தகம் டவுன் பகுதிக்கு செல்லும் புறவழிச் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது.
2024 -- 25ம் நிதியாண்டில், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 600 மீட்டருக்கு, சாலையின் இடது புறத்தில் மழைநீர் வடிகால்வாய், சதுர வடிவ கல்வெட்டு பாலம், தடுப்பு சுவர் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒரு சில மாதங்களில் பணி முடியும் வகையில், விரைந்து பணிகள் நடைபெற்று வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனால், மதுராந்தகம் புறவழிச் சாலையில் நீடித்து வந்த நீண்ட கால பிரச்னைக்கு, இதன் வாயிலாக தீர்வு காணப்பட்டுள்ளது.