Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பெரியகயப்பாக்கம் பள்ளி வளாகத்தை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பெரியகயப்பாக்கம் பள்ளி வளாகத்தை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பெரியகயப்பாக்கம் பள்ளி வளாகத்தை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பெரியகயப்பாக்கம் பள்ளி வளாகத்தை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ADDED : செப் 14, 2025 02:28 AM


Google News
Latest Tamil News
சித்தாமூர்,:பெரியகயப்பாக்கத்தில், செடிகள் வளர்ந்துள்ள அரசு பள்ளி வளாகத்தை சீரமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சித்தாமூர் அடுத்த பெரியகயப்பாக்கம் கிராமத்தில், அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.

இந்த வளாகம் பராமரிப்பின்றி செடிகள் வளர்ந்துள்ளதால், விஷ பூச்சிகளின் வாழ்விடமாக மாறி வருகிறது. இதனால், பள்ளி மாணவ - மாணவியருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

எனவே, பள்ளி வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us