/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஆட்சீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம் விமரிசை ஆட்சீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம் விமரிசை
ஆட்சீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம் விமரிசை
ஆட்சீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம் விமரிசை
ஆட்சீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம் விமரிசை
ADDED : மே 11, 2025 01:44 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில் தொண்டை நாட்டு சிவ ஸ்தலங்களில் ஒன்றானதும், சைவ சமய குறவர்களால் பாடல் பெற்றதுமான, புகழ்பெற்ற அருள்மிகு இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவில் உள்ளது.
இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இக்கோவிலில், நேற்று, சித்திரை மாத வளர்பிறை சனி பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடந்தது.
இதில், நந்தியம் பெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், உள்ளிட்டவற்றால், அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, நந்தி வாகனத்தில் ஆட்சீஸ்வரரும், இளங்கிளி அம்மனும், கோவிலின் உட்பிரகாரத்தில், வலம் வந்து, அருள் பாலித்தனர்.
பிரணவ மலை
திருப்போரூரில் பிரசித்தி பெற்ற பிரணவ மலை அமைந்துள்ளது. இங்கு, பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், நேற்று சித்திரை மாத மகா சனி பிரதோஷ விழா சிறப்பாக நடந்தது.
மாலை 4:30 மணிக்கு நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பின், பாலாம்பிகை அம்மனுக்கும், கைலாசநாதருக்கும், அபிஷேக, ஆராதனை நடந்தது.
பின், உற்சவ மூர்த்தி பல்லக்கில் எழுந்தருளினார். மூன்று முறை கோவிலை வலம் வந்த உற்சவருக்கு, ஈசான மூலையில், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.