/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/மாற்றுப்பாதை சகதியானதால் செம்பூர்வாசிகள் அவஸ்தைமாற்றுப்பாதை சகதியானதால் செம்பூர்வாசிகள் அவஸ்தை
மாற்றுப்பாதை சகதியானதால் செம்பூர்வாசிகள் அவஸ்தை
மாற்றுப்பாதை சகதியானதால் செம்பூர்வாசிகள் அவஸ்தை
மாற்றுப்பாதை சகதியானதால் செம்பூர்வாசிகள் அவஸ்தை
ADDED : ஜன 11, 2024 01:25 AM
பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே செம்பூர் - சேவூர் இடையே, 5 கி.மீ., அளவிலான தார் சாலை உள்ளது. பல ஆண்டுகளாக சாலை சேதமடைந்து இருந்ததால், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக, 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய சாலை அமைக்கும் பணிகள், சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டன.
சாலையின் நடுவே கால்வாய்கள் செல்லும் 10 இடங்களில், சிறுபாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. செம்பூர் கிராம குடியிருப்பு பகுதியிலும் சிறுபாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அதனால், அப்பகுதிவாசிகள் பயன்பாட்டிற்காக மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டது. சில தினங்களுக்கு முன் பெய்த மழையால், அந்த மாற்றுப்பாதை சகதியானது.
அதனால், அப்பகுதிவாசிகள் எங்கும் செல்ல முடியவில்லை. மேலும், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனம், லோடு ஆட்டோ, கார், லாரி போன்ற வாகனங்கள், சகதியில் சிக்கிக் கொள்கின்றன.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.