Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செய்யூர் அரசு கலை கல்லுாரியில் 16ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

செய்யூர் அரசு கலை கல்லுாரியில் 16ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

செய்யூர் அரசு கலை கல்லுாரியில் 16ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

செய்யூர் அரசு கலை கல்லுாரியில் 16ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

ADDED : ஜூன் 14, 2025 01:13 AM


Google News
செய்யூர்:செய்யூரில், புதிதாக துவக்கப்பட்டுள்ள செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நாளை மறுநாள் 16ம் தேதி துவக்கப்பட்டு, நடக்கஉள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்தில் புதிதாக, கடந்த மாதம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்கப்பட்டது.

இந்த கல்வி ஆண்டிற்காக ஆங்கில வழி கற்றலில் மூன்று, தமிழ் வழி கற்றலில் இரண்டு என, மொத்தம் ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ், 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில், 9,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், தரவரிசை வெளியிடப்பட்டு, மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு உள்ளது.

முதலாவதாக, சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு, கடந்த 2ம் தேதி துவங்கியது. பின், பொதுப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு, கடந்த 6ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் 12ம் தேதி நிறைவடைந்தது.

இதையடுத்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை மறுநாள் 16ம் தேதி துவக்கப்பட்டு நடக்க உள்ளது.

இதன்படி, 16ம் தேதி பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவுக்கும், 17ம் தேதி பி.காம்., பொது பாடப் பிரிவிற்கும், 18ம் தேதி பி.பி.ஏ., பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன் பிரிவிற்கும் கலந்தாய்வு நடக்கிறது.

வரும் 19ம் தேதி பி.ஏ., வரலாறு பாடப்பிரிவுக்கும், 20ம் தேதி பி.ஏ., பொலிடிகல் சயின்ஸ் பாடப் பிரிவுக்கும் கலந்தாய்வு நடக்க உள்ளது.

இந்த கலந்தாய்வு நிறைவடைந்து, வரும் 30ம் தேதி கல்லுாரி வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.

செங்கை கல்லுாரியில் 668 பேர்

செங்கல்பட்டு ராஜேஸ்வேரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு சேர்க்கைக்கு, 990 இடங்கள் உள்ளன.இந்த இடங்களுக்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 11,594 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதைத்தொடர்ந்து, கல்லுாரி வளாகத்தில் முதல்கட்ட கலந்தாய்வு, கடந்த 4ம் தேதி துவங்கி, 9ம் தேதி முடிந்தது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு, கடந்த 10ம் தேதி துவங்கி, நேற்று முடிந்தது.இந்த கலந்தாய்வில், 668 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மாணவர் சேர்க்கை தரவரிசை மற்றும் இன சுழற்சி அடிப்படையிலும், 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையிலும், இம்மாதம் இறுதி வரை நடைபெறும் என, கல்லுாரி முதல்வர் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us