/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடி கைது நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடி கைது
நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடி கைது
நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடி கைது
நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடி கைது
ADDED : ஜூன் 25, 2025 09:55 PM
திருப்போரூர்:நாட்டுவெடிகுண்டு தயாரித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
வண்டலுார் அடுத்த வேங்கடமங்கலம் ஊராட்சி 9வது வார்டு உறுப்பினராக இருந்தவர் அன்பரசு, 28. இவர் 2023ம் ஆண்டு நவம்பர் 22 ம் தேதி திருப்போரூர் அருகே கீரப்பாக்கத்தில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காயார் போலீசார் ஒன்பது பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வந்த அவர்கள் போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர். கண்காணிப்பில் உள்ள ஒத்திவாக்கத்தை சேர்ந்த சுனில் என்ற சுதர்சன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் காயார் போலீசார் சுனிலை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது, அவர் தங்கிய இடங்களில் சோதனை செய்ததில் சுனில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக நேற்று சுனிலை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், அன்பரசுவின் கூட்டாளிகள் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக அறிந்தேன். தற்காப்புக்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக கூறினார். அவரிடம் இருந்து ஒரு நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்தனர்.