/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ரூ.5 கோடியில் துவக்கப்பட்ட சாலை பணிகள் திடீர் நிறுத்தம்ரூ.5 கோடியில் துவக்கப்பட்ட சாலை பணிகள் திடீர் நிறுத்தம்
ரூ.5 கோடியில் துவக்கப்பட்ட சாலை பணிகள் திடீர் நிறுத்தம்
ரூ.5 கோடியில் துவக்கப்பட்ட சாலை பணிகள் திடீர் நிறுத்தம்
ரூ.5 கோடியில் துவக்கப்பட்ட சாலை பணிகள் திடீர் நிறுத்தம்
ADDED : பிப் 25, 2024 01:21 AM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே சித்தாமூர் - பெருக்கரணை கிராமம் செல்லும், 3.60 கிலோமீட்டர் துார தார் சாலை உள்ளது.
இந்த சாலையை கரிக்கந்தாங்கல், பூங்குணம், பழவூர், கன்னிமங்கலம், புத்துார், முகுந்தகிரி, பெருக்கரணை ஆகிய கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பெருக்கரணை கிராமத்தில் உள்ள மரகத தண்டாயுதபாணி கோவிலுக்கு வந்து செல்லும் மக்களின் பிரதான சாலையாகயும் உள்ளது.
பல ஆண்டுகளாக பழுதடைந்து, ஜல்லிகள் சிதறி இருந்ததால், தினமும் பள்ளி, கல்லுாரிகள் மற்றும் விவசாய வேலைக்கு செல்வோர் கடும் சிரமப்பட்டு வந்தனர். மேலும், சேதமடைந்த சாலையில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வந்தன.
எனவே, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், 3.60 கிலோமீட்டர் சாலையை சீரமைக்க, 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 5.03 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த ஆக., மாதம் சாலை சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன, சாலையின் நடுவே மழைநீர் கால்வாய்கள் செல்லும் 10 இடங்களில் சிறுபாலங்கள் அமைக்கும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டு உள்ளதாக, அப்பகுதி வாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நிறுத்தப்பட்டுள்ள சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.