/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தேன்பாக்கத்தில் சாலை பணி நிறுத்தம்: எல்லை பிரச்னையால் மக்கள் அவதி தேன்பாக்கத்தில் சாலை பணி நிறுத்தம்: எல்லை பிரச்னையால் மக்கள் அவதி
தேன்பாக்கத்தில் சாலை பணி நிறுத்தம்: எல்லை பிரச்னையால் மக்கள் அவதி
தேன்பாக்கத்தில் சாலை பணி நிறுத்தம்: எல்லை பிரச்னையால் மக்கள் அவதி
தேன்பாக்கத்தில் சாலை பணி நிறுத்தம்: எல்லை பிரச்னையால் மக்கள் அவதி
ADDED : செப் 22, 2025 12:38 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே தேன்பாக்கத்தில் நடந்து வந்த சாலை பணி, ஊராட்சி, பேரூராட்சி எல்லை பிரச்னையால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அச்சிறுபாக்கம் அருகே சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து தேன்பாக்கம், அரப்பேடு வழியாக செல்லும் கிராம சாலை உள்ளது.
இந்த சாலை தேன்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது. சாலை, அச்சிறுபாக்கம் பேரூராட்சி 15 வது வார்டு மலை நகர் பகுதியை ஒட்டி செல்வதால், பேரூராட்சி நிதியில் சிமென்ட் சாலை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து, சாலையை பெயர்த்தெடுத்தது.
ஆனால், சாலை எங்கள் ஊராட்சிக்கு உட்பட்டது எனக்கூறி, தேன்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தினர் பணியை தடுத்து நிறுத்தினர். சாலையை பணியை ஊராட்சி நிர்வாகம் செய்ய அனுமதிக்க வேண்டுமென, சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஊராட்சி நிர்வாகத்திடம் ஆலோசிக்காமல், பேரூராட்சி நிர்வாகம் பெயர்த்தெடுத்ததால், சாலை ஆறு மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. வாகன விபத்துக்கும் வழி வகுப்பதால், சித்தாமூர் ஒன்றிய அதிகாரிகள், சாலையை ஆய்வு செய்து, விரைவாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.