/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ விபத்தில் காயமடைந்தோரை காப்பாற்றியோருக்கு பரிசு தொகை விபத்தில் காயமடைந்தோரை காப்பாற்றியோருக்கு பரிசு தொகை
விபத்தில் காயமடைந்தோரை காப்பாற்றியோருக்கு பரிசு தொகை
விபத்தில் காயமடைந்தோரை காப்பாற்றியோருக்கு பரிசு தொகை
விபத்தில் காயமடைந்தோரை காப்பாற்றியோருக்கு பரிசு தொகை
ADDED : ஜூன் 19, 2025 08:24 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களை காப்பாற்றியோர், பரிசு தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசு இணைந்து,'குட் சமாரிடன்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், சாலை விபத்தின் போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நபர்களை, விபத்து நடைபெற்ற ஒரு மணி நேரத்திற்குள், அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கும் நபர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் சார்பில் 5,000 ரூபாயும், மாநில அரசின் சார்பில், 5,000 ரூபாய் என, மொத்தம் 10,000 ரூபாய் பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு காப்பாற்றி இருந்தால் பரிசுத்தொகை பெற, தங்களது பெயர், முகவரி மற்றும் விபத்து குறித்த விபரங்களுடன், கலெக்டர் அலுவலகம், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகுமாறு, மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.