Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஆக்கிரமிப்பில் சிக்கிய 12 சென்ட் தண்டலத்தில் வருவாய் துறை மீட்பு

ஆக்கிரமிப்பில் சிக்கிய 12 சென்ட் தண்டலத்தில் வருவாய் துறை மீட்பு

ஆக்கிரமிப்பில் சிக்கிய 12 சென்ட் தண்டலத்தில் வருவாய் துறை மீட்பு

ஆக்கிரமிப்பில் சிக்கிய 12 சென்ட் தண்டலத்தில் வருவாய் துறை மீட்பு

ADDED : மார் 25, 2025 07:41 AM


Google News
செங்கல்பட்டு : தண்டலத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசுக்கு சொந்தமான இடத்தை, வருவாய் துறையினர் மீட்டனர்.

திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில், புல எண் 180/17ல், கிராம நத்தம் வகைப்பாடு நிலத்தை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து, தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.

இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதன்பின், ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவையடுத்து, கடந்த 22ம் தேதி வருவாய் துறை, போலீசார், தீயணைப்பு துறையினர் இணைந்து, ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தை மீட்டனர்.

இதுகுறித்து, வருவாய் துறையினர் கூறியதாவது:

நத்தம் வகைப்பாடு நிலத்தில் வீடு மட்டுமே கட்டி வசிக்க முடியும். ஆனால், வணிக ரீதியாக கட்டடம் கட்டி செயல்பட்டதால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டுள்ளோம். ஆக்கிமிரப்பு செய்யப்பட்ட 12 சென்ட் நிலத்தின் மதிப்பு, 18.05 லட்சம் ரூபாய்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us