/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாமல்லையில் தொடர் மின்வெட்டு செய்வதறியாது பகுதிவாசிகள் தவிப்பு மாமல்லையில் தொடர் மின்வெட்டு செய்வதறியாது பகுதிவாசிகள் தவிப்பு
மாமல்லையில் தொடர் மின்வெட்டு செய்வதறியாது பகுதிவாசிகள் தவிப்பு
மாமல்லையில் தொடர் மின்வெட்டு செய்வதறியாது பகுதிவாசிகள் தவிப்பு
மாமல்லையில் தொடர் மின்வெட்டு செய்வதறியாது பகுதிவாசிகள் தவிப்பு
ADDED : மார் 20, 2025 09:06 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாமல்லபுரம், பிரபல சுற்றுலா இடமாக விளங்குகிறது. இங்குள்ள பல்லவர் கால சிற்பங்களை ரசிக்க, பயணியர் சுற்றுலா வருகின்றனர்.
சுற்றுலாவைச் சார்ந்து கைவினைப் பொருட்கள் கடைகள், சிற்பக் கூடங்கள், விடுதிகள், உணவகங்கள், குளிர்பானம், ஐஸ்கிரீம் கடைகள் உள்ளிட்டவை இயங்குகின்றன.
சுற்றுலா முக்கியத்துவம் கருதி, இப்பகுதியில் தடையற்ற மின்சாரம் விநியோகிக்க வேண்டும். பிற பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுத்தினாலும், இங்கு மட்டும் முழு நேரமும் மின்சாரம் விநியோகிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆனால் தற்போது, காலை விடிந்தது முதல், நாள் முழுதும் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
மின்வெட்டு ஏற்பட்டால், அரை மணி நேரம் முதல், பல மணி நேரம் வரை நீடிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த பல நாட்களாக, ஒரே நாளில் பலமுறை மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து, பொதுமக்களுக்கு முன்னதாக அறிவிப்பும் செய்யாததால், கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் அத்தியாவசிய பணிகள், தொழில்கள் ஆகியவற்றை செய்ய இயலாமல், இப்பகுதியினர் தவித்து வருகின்றனர்.
பகல் நேர மின்வெட்டால், வெயில் புழுக்கத்தில் தவிக்கின்றனர். பல இடங்களில் வீடுகளில், மின்சாதனங்கள் பழுதடைகின்றன. இதனால், மாமல்லபுரத்தில் தடையற்ற மின்சாரம் விநியோகிக்க வேண்டுமென, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.