/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/கழிப்பறையில் கால் சிக்கி தவித்த சிறுமி மீட்புகழிப்பறையில் கால் சிக்கி தவித்த சிறுமி மீட்பு
கழிப்பறையில் கால் சிக்கி தவித்த சிறுமி மீட்பு
கழிப்பறையில் கால் சிக்கி தவித்த சிறுமி மீட்பு
கழிப்பறையில் கால் சிக்கி தவித்த சிறுமி மீட்பு
ADDED : பிப் 23, 2024 11:20 PM
தாம்பரம்:சென்னை, தாம்பரம் அருகே சிட்லப்பாக்கம் பாபு தெருவில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் வசிக்கும் தம்பதியின் 10 வயது சிறுமியின் கால், எதிர்பாராத விதமாக கழிப்பறையின் ஓட்டையில் சிக்கியுள்ளது. சத்தம் கேட்டு வந்த பெற்றோர், சிறுமியின் காலை வெளியே எடுக்க முயன்றும், அவர்களால் முடியவில்லை.
இதுகுறித்து, தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி, உளியால் கழிப்பறையை உடைத்து, சிறுமியை பத்திரமாக மீட்டனர்.