Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ எல்.எண்டத்துார் அரசு பள்ளி வளாகத்தை சீரமைக்க கோரிக்கை

எல்.எண்டத்துார் அரசு பள்ளி வளாகத்தை சீரமைக்க கோரிக்கை

எல்.எண்டத்துார் அரசு பள்ளி வளாகத்தை சீரமைக்க கோரிக்கை

எல்.எண்டத்துார் அரசு பள்ளி வளாகத்தை சீரமைக்க கோரிக்கை

ADDED : செப் 22, 2025 12:44 AM


Google News
Latest Tamil News
மதுராந்தகம்:எல். எண்டத்துாரில் செடிகள் வளர்ந்துள்ள அரசு பள்ளி வளாகத்தை சீரமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழாமூர் - உத்திரமேரூர் மாநில நெடுஞ்சாலையில், எல். எண்டத்துாரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறை கட்டடம் உள்ள பகுதியில் பராமரிப்பின்றி செடிகள் வளர்ந்துள்ளதால், விஷ பூச்சிகளின் வாழ்விடமாக மாறி வருகிறது.

இதனால், பள்ளி மாணவ -- மாணவியருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே, பள்ளி வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us