/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பழைய ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை பழைய ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
பழைய ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
பழைய ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
பழைய ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
ADDED : மே 30, 2025 11:21 PM

செங்கல்பட்டு, :செங்கல்பட்டு பழைய ஜி.எஸ்.டி., சாலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு பழைய ஜி.எஸ்.டி., சாலை, நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த சாலை, சப் - கலெக்டர் அலுவலகம், விநாயகர் கோவில் வழியாக, மேட்டுத்தெரு, பழைய பேருந்து நிலையம் வழியாக, கனரக வாகனங்கள், அரசு பேருந்துகள் உள்ளிட்டவை சென்று வந்தன.
இச்சாலை வழியாக, கடந்த பல ஆண்டுகளாக வாகனங்கள் செல்லாததால், சாலையை ஆக்கிரமித்து பலர் வீடுகள் கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காமல், நெடுஞ்சாலைத் துறையினர் கிடப்பில் போட்டனர்.
இதற்கிடையில், நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், பழைய ஜி.எஸ்.டி., சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், பழைய ஜி.எஸ்.டி., சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் பகுதியில், நகராட்சி நிர்வாகம் மழைநீர் கால்வாய் கட்டும் பணியை துவக்கி உள்ளது.
அத்துடன், இந்த சாலையிலுள்ள ஆக்கிமிப்புகளையும் அகற்றி, வாகனங்கள் எளிதில் சென்று வர, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.