Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ திருக்கழுக்குன்றம் டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை

திருக்கழுக்குன்றம் டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை

திருக்கழுக்குன்றம் டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை

திருக்கழுக்குன்றம் டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை

ADDED : செப் 03, 2025 12:55 AM


Google News
செங்கல்பட்டு:திருக்கழுக்குன்றத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்கழுக்குன்றத்தில், திருக்கழுக்குன்றம் - கருங்குழி சாலையில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது.

இச்சாலை வழியாக மதுராந்தகம், பொன்விளைந்தகளத்துார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பள்ளி, கல்லுாரி, அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், திருப்போரூரில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகே, மாலை 5:00 மணியிலிருந்து இரவு 8:00 மணி வரை, 'குடி'மகன்கள் சாலையில் அமர்ந்து மதுபானம் அருந்துகின்றனர்.

இதுட்டுமின்றி, வாகனங்களை சாலையில் தாறுமாறாக நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையில் செல்லும் பெண்களையும் 'குடி'மகன்கள் கேலி கிண்டல் செய்வதால், அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென, கலெக்டர் சினேகாவிடம், பல்வேறு தரப்பினரும் மனு அளித்தனர்.

இந்த மனுவின் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளன.

இந்த டாஸ்மாக் கடையால் பெரிய அசம்பாவிதங்கள் நடப்பதற்குள், டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us