/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பழையனுார் கிராம பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்த கோரிக்கை பழையனுார் கிராம பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்த கோரிக்கை
பழையனுார் கிராம பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்த கோரிக்கை
பழையனுார் கிராம பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்த கோரிக்கை
பழையனுார் கிராம பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்த கோரிக்கை
ADDED : மார் 25, 2025 07:36 AM
மதுராந்தகம் : மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்டு பழையனுார் ஊராட்சி உள்ளது.
அங்கு, பழையனுார் சாலை, குளக்கரை, பழையனுார் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதி மக்கள் செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் நகர் பகுதிகளுக்கு செல்வதற்காக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், படாளம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிக்கு வேலைக்கு செல்வோர் என, நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள், 3 கி.மீ., துாரம் நடந்து சென்று, படாளம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.
செங்கல்பட்டில் இருந்து படாளம் வழியாக தச்சூர் வரை செல்லும் தடம் எண்: டி24, டி4 மற்றும் சூனாம்பேடில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் '81வி' ஆகிய பேருந்துகளை பழையனுார் சாலை, குளக்கரை, பழையனுார் கிராமம் வழியாக இயக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த சம்பத்து, 65, என்பவர் கூறியதாவது:
பழையனுார் சாலை, குளக்கரை, பழையனுார் கிராமம் வழியாக பேருந்துகள் இயக்க வேண்டும் என, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளிக்கப்பட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, பழையனுார் பகுதிக்கு பேருந்து இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.