/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ரெட்டிபாளையம் சாலை ஓரம் தடுப்பு அமைக்க கோரிக்கை ரெட்டிபாளையம் சாலை ஓரம் தடுப்பு அமைக்க கோரிக்கை
ரெட்டிபாளையம் சாலை ஓரம் தடுப்பு அமைக்க கோரிக்கை
ரெட்டிபாளையம் சாலை ஓரம் தடுப்பு அமைக்க கோரிக்கை
ரெட்டிபாளையம் சாலை ஓரம் தடுப்பு அமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 16, 2025 01:48 AM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் --பாலுார் சாலை 13 கி.மீ., நீளம் உடையது. இந்த சாலையை பாலுார், ரெட்டிபாளையம், வெண்பாக்கம், கொளத்துார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையின் இணைப்பு சாலையாகும். இந்த சாலை வளைவுகளில் இரும்பு தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை குறியீடுகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலையில் ரெட்டிபாளையம் பகுதியில் அதிக வளைவுகள் மற்றும் ஆழமான மழை நீர் வடிகால்வாய் உள்ளது. இதன் காரணமாக வேகமாக வரும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் தடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சாலைக்கும் மழைநீர் கால்வாய்க்கும் இடையே இரும்பு தடுப்பு அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.