/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ காட்டுதேவாத்துார் ஏரி உபரிநீர் கால்வாயில் தடுப்பணை அமைக்க கோரிக்கை காட்டுதேவாத்துார் ஏரி உபரிநீர் கால்வாயில் தடுப்பணை அமைக்க கோரிக்கை
காட்டுதேவாத்துார் ஏரி உபரிநீர் கால்வாயில் தடுப்பணை அமைக்க கோரிக்கை
காட்டுதேவாத்துார் ஏரி உபரிநீர் கால்வாயில் தடுப்பணை அமைக்க கோரிக்கை
காட்டுதேவாத்துார் ஏரி உபரிநீர் கால்வாயில் தடுப்பணை அமைக்க கோரிக்கை
ADDED : மே 11, 2025 01:48 AM

செய்யூர்:மதுராந்தகம் ஒன்றியம், காட்டுதேவாத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாய் வழியாக விளங்கனுார், ஓணம்பாக்கம், பவுத்தங்கரணை வழியாக இரும்பேடு ஏரிக்கு செல்கிறது.
இந்த ஏரியின் மூலமாக 400க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு வயல்வெளி நீர்ப்பாசனம் பெறுகிறது. விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாகும். ஏரி, குளம், கிணறு போன்ற நீர்பாசனங்கள் வாயிலாக விவசாயம் செய்யப்படுகிறது.
கோடை காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்யமுடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து காட்டுதேவாத்துார் ஏரி உபரிநீர் கால்வாயை சீரமைத்து தடுப்பணை அமைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.