/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வளர்குன்றம் -- மானாமதி சாலை பணி விரநை்து முடிக்க கோரிக்கை வளர்குன்றம் -- மானாமதி சாலை பணி விரநை்து முடிக்க கோரிக்கை
வளர்குன்றம் -- மானாமதி சாலை பணி விரநை்து முடிக்க கோரிக்கை
வளர்குன்றம் -- மானாமதி சாலை பணி விரநை்து முடிக்க கோரிக்கை
வளர்குன்றம் -- மானாமதி சாலை பணி விரநை்து முடிக்க கோரிக்கை
ADDED : மே 12, 2025 12:52 AM

திருப்போரூர்:திருப்போரூர் வட்டம், வளர்குன்றம் சந்திப்பு- - மானாமதி சாலை, 8 கி.மீ., தொலைவு உள்ளது. நெடுஞ்சாலைத் துறையின் கீழ் உள்ள இச்சாலை, குறுகியதாகவும், சேதமடைந்த நிலையிலும் இருந்தது.
இதனால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு சென்று வருவோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த சாலையை மேம்படுத்த வேண்டும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் அரசிடம், இப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, 23 கோடி ரூபாய் மதிப்பில், அதற்கான பணிகள் துவங்கப்பட்டன.
இதில், சிறுபாலம், தரைப்பாலம் வரும் இடங்களில், பாலம் கட்டப்பட்டது. தொடர்ந்து சாலை பள்ளம், மேடுகள் சமன் செய்தல், சாலையோர முட்செடிகள் அகற்றி அகலப்படுத்துதல், தார் போடுதல் என 90 சதவீதம் பணிகள் முடிந்து, தற்போது புதிய சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், சாலையின் நடுவே, வெள்ளை கோடு அமைக்காததால், வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் வாகனங்கள் எதிரெதிரே செல்லும் போது, சாலை நடுவே வெள்ளை குறியீடு கோடு இல்லாததால், வாகன ஓட்டிகள் திணறி செல்கின்றனர்.
அதேபோல், சாலையில் ஆங்காங்கே உள்ள அபாய் வளைவுகளில் தடுப்பு அமைத்தல், சாலையோரம் மண் அணைத்தல், வழிகாட்டி மற்றும் எச்சரிப்பு பலகை அமைக்க வேண்டும் என, பொது மக்கள் கூறுகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் இச்சாலையில், மேற்கண்ட கோரிக்கை உட்பட விடுபட்ட பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.