/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/புலியூர் மயான பாதையை மேம்படுத்த கோரிக்கைபுலியூர் மயான பாதையை மேம்படுத்த கோரிக்கை
புலியூர் மயான பாதையை மேம்படுத்த கோரிக்கை
புலியூர் மயான பாதையை மேம்படுத்த கோரிக்கை
புலியூர் மயான பாதையை மேம்படுத்த கோரிக்கை
ADDED : பிப் 06, 2024 04:04 AM
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் அடுத்த பட்டிக்காடு ஊராட்சி, புலியூர் பகுதியில், இறந்தவர் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல, முறையான சாலை வசதி இல்லை. மண் பாதையாகவே நீண்டகாலமாக உள்ளது.
இப்பாதையிலும் புதர், முட்செடிகள் சூழ்ந்து, அதில் நடக்க இயலவில்லை. மழைக்காலத்தில், பாதையில் மண் அரித்து, பள்ளங்கள் உருவாகி மேலும் சிக்கலாகிறது.
இப்பாதையை சாலையாக மேம்படுத்த ஊராட்சி, வட்டார வளர்ச்சி நிர்வாகங்களிடம் முறையிட்டும் அலட்சியப்படுத்தப்படுகிறது.
கான்கிரீட் சாலையாகவோ, பேவர் பிளாக் சாலையாகவோ மயான பாதையை மேம்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.