/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ரூ.1.40 கோடி மதிப்பில் 28 பள்ளிகள் சீரமைப்புரூ.1.40 கோடி மதிப்பில் 28 பள்ளிகள் சீரமைப்பு
ரூ.1.40 கோடி மதிப்பில் 28 பள்ளிகள் சீரமைப்பு
ரூ.1.40 கோடி மதிப்பில் 28 பள்ளிகள் சீரமைப்பு
ரூ.1.40 கோடி மதிப்பில் 28 பள்ளிகள் சீரமைப்பு
ADDED : ஜன 28, 2024 04:00 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், 28 பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு, 1 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மிக்ஜாம் புயல் காரணமாக கன மழை பெய்தது. இதில், செங்கல்பட்டு, மதுராந்தகம் கல்வி மாவட்டங்களில், அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையில், 28 பள்ளிகள் சேதமடைந்தன. இதையடுத்து, பள்ளி கட்டடங்கள் மற்றும் வகுப்பறைகளை பராமரிக்க நிதி கேட்டு, பள்ளிக்கல்வி துறைக்கு, முதன்மை கல்வி அலுவலர் கருத்துரு அனுப்பி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, புனிததோமையர்மலை வட்டாரத்தில் உள்ள கோவிலம்பாக்கம், சித்தலாப்பாக்கம், பெரும்பாக்கம், நன்மங்கலம், திருப்போரூர் வட்டாரத்தில், திருப்போரூர், கேளம்பாக்கம், மானாமதி.
காட்டாங்கொளத்துார் வட்டாரத்தில், செங்கல்பட்டு, மறைமலை நகர், கண்டிகை, திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில், திருக்கழுக்குன்றம், பொன்விளைந்தகளத்துார்.
அச்சிறுபாக்கம் வட்டாரத்தில், நெடுங்கல், சித்தாமூர் வட்டாரத்தில், சிறுமயிலுார் ஆகிய பகுதியில் உள்ள, 28 அரசு மேல்நிலைப் பள்ளிகளின் கட்டடம் மற்றும் வகுப்பறைகளை பராமரிக்க, அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்த பராமரிப்பு பணிக்காக, பொதுப்பணித் துறை வாயிலாக, 'டெண்டர்' விடப்பட்டு, பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.