/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ஏரி மதகு பகுதியில் மீண்டும் உடைப்பு காட்டுதேவாத்துாரில் வீணாகும் மழைநீர்ஏரி மதகு பகுதியில் மீண்டும் உடைப்பு காட்டுதேவாத்துாரில் வீணாகும் மழைநீர்
ஏரி மதகு பகுதியில் மீண்டும் உடைப்பு காட்டுதேவாத்துாரில் வீணாகும் மழைநீர்
ஏரி மதகு பகுதியில் மீண்டும் உடைப்பு காட்டுதேவாத்துாரில் வீணாகும் மழைநீர்
ஏரி மதகு பகுதியில் மீண்டும் உடைப்பு காட்டுதேவாத்துாரில் வீணாகும் மழைநீர்
ADDED : ஜன 10, 2024 11:30 PM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே காட்டுதேவாத்துார் கிராமத்தில், 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
ஏரி மூலமாக, காட்டுதேவாத்துார், வேட்டூர் கிராமங்களில் உள்ள, 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய நிலம் நீர்ப்பாசனம் பெறுகிறது.
கடந்த மாதம் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த மழையின் போது, ஏரி மதகு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது. பின், பொதுப்பணித்துறை மூலமாக மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி பாதுகாக்கப்பட்டன.
இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக, ஏரிக்கு நீர்வரத்து அதிகமானதால், மணல் மூட்டைகள் அடுக்கப்பட்ட பகுதியில் மீண்டும் மண் அரிக்கப்பட்டு, ஏரி மதகு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறது.
இதனால், ஏரியில் போதுமான அளவு நீரை சேமிக்க முடியாத சூழல் உள்ளது. ஆகையால், மதகுப்பகுதியை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த மாதம், இதே பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது. அப்போது, மணல் மூட்டைகள் கொண்டு, மதகுப்பகுதி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
தற்போது, மீண்டும் அதே இடத்தில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. உடைப்பு ஏற்பட்டு உள்ள பகுதிக்கு, வயல்வெளி மூலமாக தான் செல்ல முடியும்.
ஆனால், தற்போது வயல்வெளி முழுதும் பயிரிடப்பட்டு உள்ளதால், பொக்லைன் இயந்திரம் மூலமாக சீரமைக்க வாய்ப்பு இல்லை.
ஆகையால், நேற்று உடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, மீண்டும் மணல் மூட்டைகள் கொண்டு சீரமைக்க முயற்சி செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.