/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைஇளம்பெண் துாக்கிட்டு தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை
இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை
இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை
இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை
ADDED : ஜன 04, 2024 09:45 PM
கூடுவாஞ்சேரி:சிங்கபெருமாள் கோவில், ஜீவா நகர் மூன்றாவது குறுக்கு தெருவில் வசிப்பவர் கோபிநாத், 27. இவர், மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில், குக்கிங் சூப்பர்வைசராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர், கவுசல்யா, 26, என்ற பெண்ணை காதலித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு, ஏழு மாத பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கோபிநாத்திற்கும், கவுசல்யாவிற்கும் இடையே, குடும்பம் நடத்த போதுமான வருமானம் இல்லை என, அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம், கோபிநாத் மொபைல் போனை எடுத்துப்பார்த்த கவுசல்யா, அதில் 'ஜிபே' வாயிலாக பிரியா என்ற பெண்ணுக்கு பணம் அனுப்பியிருந்தது கண்டு கோபமானார்.
இது குறித்து, கோபிநாத்திடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். அதற்கு கோபிநாத் முறையாக பதில் அளிக்காததால், கவுசல்யா மனம் உடைந்தார்.
நேற்று காலை, கோபிநாத் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். தனிமையில் இருந்த கவுசல்யா, வீட்டில் உள்ள மின் விசிறியில் துப்பட்டாவால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதே வீட்டில் மேல் மாடியில் வசித்த கவுசல்யாவின் தாய் மோகனா, மகள் துாக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், கவுசல்யா ஏற்கனவே இறந்து விட்டார் என, தெரிவித்தனர். புகாரின்படி, மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆவதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.